வணிகம்
எஸ்.பி.ஐ டூ யெஸ் பேங்க் வரை… பெர்சனல் லோனுக்கு கம்மி வட்டி; இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க!

எஸ்.பி.ஐ டூ யெஸ் பேங்க் வரை… பெர்சனல் லோனுக்கு கம்மி வட்டி; இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க!
நவீன நிதி திட்டமிடலின் இன்றியமையாத பகுதியாக தனிநபர் கடன்கள் மாறிவிட்டன. எந்தவித சொத்துகளையும் அடகு வைக்காமல், தனிநபர்கள் விரைவாக நிதி பெற இக்கடன்கள் வழிவகை செய்கின்றன. கடன் அடைத்தல், மருத்துவ தேவை, வீடு கட்டுமானம் போன்ற பல்வேறு நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முன்னணி வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றன.குறைந்த வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்கள் வழங்கும் வங்கிகள்:ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ): இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, ஆண்டுக்கு 10.3% வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. குறிப்பாக, அதிகபட்சமாக ரூ. 35 லட்சம் வரை கடன்களை வழங்குகிறது.ஹெச்.டி.எஃப்.சி வங்கி: ஹெச்.டி.எஃப்.சி வங்கி 100% டிஜிட்டல் முறையில், ரூ. 40 லட்சம் வரை கடன்களை வழங்குகிறது. வட்டி விகிதம் 10.9% முதல் 24% வரை உள்ளது. கடன் பெறுபவர்கள் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 6,500 வரை செயலாக்க கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ. 50 லட்சம் வரை கடன் பெறலாம். வட்டி விகிதம் 10.85% முதல் 16.5% வரை உள்ளது. 72 மாதங்கள் வரை திருப்பி செலுத்தும் கால அவகாசமும் வழங்கப்படுகிறது.ஆக்சிஸ் வங்கி: ஆக்சிஸ் வங்கி ரூ. 40 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது. திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை இருக்கும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 11.25% முதல் தொடங்குகிறது. செயலாக்க கட்டணம், மொத்த கடன் தொகையில் 2% மற்றும் ஜிஎஸ்டி ஆகும்.ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி: ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆண்டுக்கு 9.99% வட்டி விகிதத்தில் தொடங்கி, ரூ. 10 லட்சம் வரை தனிநபர் கடனை உடனடியாக வழங்குகிறது.ஹெச்.எஸ்.பி.சி வங்கி: ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை தனிநபர் கடன்கள் கிடைக்கின்றன. வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.15% முதல் 16% வரை உள்ளது. யெஸ் வங்கி: இதில், மாதத்திற்கு ரூ. 25,000 நிலையான வருமானம் மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள், ஆண்டுக்கு 11.25% முதல் 21% வரையிலான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களைப் பெறலாம். செயலாக்கக் கட்டணம், கடன் தொகையில் 2.5% வரை இருக்கும்.கோடக் மஹிந்திரா வங்கி: கோடக் மஹிந்திரா வங்கியில் அதிகபட்சமாக ரூ. 35 லட்சம் வரை தனிநபர் கடன் பெற முடியும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.99% முதல் தொடங்குகிறது.