Connect with us

சினிமா

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி இத்தனை கார் வாங்கினாரா? ஒரு கார் மட்டுமே இத்தனை கோடியாம்..

Published

on

Loading

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி இத்தனை கார் வாங்கினாரா? ஒரு கார் மட்டுமே இத்தனை கோடியாம்..

கன்னட சீரியலில் அறிமுகமாகி தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா பவானி சங்கருக்கு பதில் அவரின் ரோலில் நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. இதனை தொடர்ந்து யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார்.தற்போது சன் டிவியின் பிளாக்பஸ்டர் சீரியலாக திகழ்ந்து வரும் கயல் சீரியலில் முக்கிய ரோலில் நடிகர் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்து வரும் கயல் நாயகி சைத்ரா ரெட்டி, ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம். சீரியல் மட்டுமின்றில் நடந்து முடிந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 3 இடத்தினை பிடித்தார்.சீரியலில் நடித்தது முதல் 4 கார்களை பயன்படுத்தி இருக்கிறார் சைத்ரா ரெட்டி. முதலில் அவர் வாங்கியது மாருதி ஸ்விஃப்ட் கார் தான்.அந்த காரை மூன்று ஆண்டுகள் வைத்திருந்தப்பின், கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் வேறு வழியின்றில் அந்த காரை விற்றுள்ளார்.லாக்டவுன் முடிந்தப்பின் கயல் சிரீயல் துவங்கப்பட்டு, அதில் நடித்த சம்பளத்தில் மகிந்திரா Alturas G4 என்ற செவன் சீட்டர் கார் வாங்கியிருக்கிறார் சைத்ரா.இதனைதொடர்ந்து அவருடைய கனவு காரான மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரை கடந்த ஆண்டு வாங்கியிருக்கிறார்.இதுதவிர அவரின் கணவருடன் ஒரு காரும் இருக்கிறது. சைத்ரா தற்போது வைத்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரின் விலை மட்டுமே ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன