வணிகம்
Todday Gold Rate 5 july: தங்கம் விலை சற்று உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

Todday Gold Rate 5 july: தங்கம் விலை சற்று உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர்ப்பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது. இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்து, சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது. இந் நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஜூலை 5) மீண்டும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.