பொழுதுபோக்கு
மசாஜ் பண்ண தனி பெட்; பள்ளிக்காக ஒரு தெருவையே வாங்கிய கணவர்: ரம்பா ஆபீஸ் டூர் வைரல்!

மசாஜ் பண்ண தனி பெட்; பள்ளிக்காக ஒரு தெருவையே வாங்கிய கணவர்: ரம்பா ஆபீஸ் டூர் வைரல்!
நடிகையாக இருந்து தற்போது பிசினஸ்வுமனாக வளர்ந்து வரும் ரம்பா, கலா மாஸ்டருடன் சேர்ந்து அவரது ஆபிஸை சுற்றிக்காட்டிய வீடியோ பிஹைன்வுட்ஸ் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ரம்பா அலுவலகத்தில் உள்ள சிறிய இண்டீரியர் வொர்க்ஸ் வரைக்கும் தெளிவாக விளக்கி கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.நடிகையாக இருந்து தற்போது பிசினஸ் வுமனாக வளர்ந்திருக்கும் நடிகை ரம்பா சென்னை அண்ணா நகரில் மேஜிக் ஹோம் என்று ஒரு கம்பெனி வைத்துள்ளார். அவரது அலுவலகத்தில் கிச்சன்களை எப்படி எல்லாம் வடிவமைக்கலாம், கிச்சனில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிங்க், பைப்புகள் உள்ளிட்ட வடிவமைப்புகள் குறித்து கூறியுள்ளார்.சிறிய அளவு பட்ஜெட்டில் இருந்து எவ்வளவு பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் அதிகபட்சம் 45 நாட்களுக்குள்ளாகவே முடித்து விடலாம் என்றும் உங்களுக்கு தேவையான சிறிய சிறிய விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்யலாம் என்றும் ரம்பா கூறியுள்ளார். அதேபோல விதவிதமான அலமாரிகள், உடல்வலி தெரியாமல் இருக்க மசாஜ் பெட்டுகள் போன்றவையும் அந்த அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளன. ரம்பாவின் கம்பெனி பெங்களூர், கனடா, சிக்காகோவில் உள்ளதாகவும் அடுத்து ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.பார்ட்னர்ஷிப்பில் நிறைய பட்ஜெட்டுகள் மற்றும் ஹைதராபாத்தில் அவர்கள் வில்லாக்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அவரது கணவர் இந்திரன் பள்ளி ஒன்றை கட்டி வருவதாகவும் அதற்காக 36 ஏக்கர் நிலத்தை ஒரு அதாவது ஒரு தெருவையே வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். கம்பெனி ஆரம்பித்தது அதற்கு பெயர் வைத்ததற்கு முக்கிய காரணமாக ரம்பா கூறியதாவது:- “எனக்கு தமிழ்நாட்டில் தான் மேஜிக் நடந்தது. திரைப்படம், திருமண வாழ்க்கை, தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கை என அனைத்தும் தமிழ்நாட்டில் ஒரு மேஜிக் மாதிரி நடந்தது. ஆகவே அனைவர் வாழ்விலும் ஒரு மேஜிக் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக மேஜிக் ஹவுஸ் என பெயர் வைக்கப்பட்டது” என்றார்.