Connect with us

பொழுதுபோக்கு

ஹீரோயின் ஆன குழந்தை நட்சத்திரம்; பாலிவுட் ஸ்டாருக்கு ஜோடியான விக்ரமின் ரீல் மகள்: வைரல் அப்டேட்!

Published

on

Sara Arjun

Loading

ஹீரோயின் ஆன குழந்தை நட்சத்திரம்; பாலிவுட் ஸ்டாருக்கு ஜோடியான விக்ரமின் ரீல் மகள்: வைரல் அப்டேட்!

தமிழ் சினிமாவில், ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது கனவத்தையும் ஈர்த்த சாரா, இப்போது பாலிவுட் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் அதிரடி-ஸ்பை த்ரில்லர் படமான ‘துரந்தர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால்,  மாதவன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளான சாரா அர்ஜுன், சினிமா உலகிற்கு புதியவர் அல்ல. சிறு வயதிலேயே தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தனது கலை பயணத்தை சாரா தொடங்கினார். ஆறு வயதிலேயே விக்ரம் நடிப்பில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரும் புகழ் பெற்றார். அதன் பின்னர், சல்மான் கான் (ஜெய் ஹோ), இம்ரான் ஹாஷ்மி (ஏக் தீ டாயன்), ஐஸ்வர்யா ராய் (ஜஸ்பா) போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராயின் இளம் வயது கதாபாத்திரமான நந்தினியாக சாரா அர்ஜுன் நடித்தது பலரது பாராட்டுகளை பெற்றது. 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக சாரா அர்ஜுன் திகழ்ந்தார். அவர், ரூ. 10 கோடி சம்பளம் பெறுவதாக ‘குல்ட்’ (Gulte) செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது, ஆதித்யா தர் இயக்கும் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக, சாரா அர்ஜுன் நடிக்கிறார். இதன் மூலம் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து முழுமையான சினிமா நடத்திரமாக அவர் உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படம், டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன