இலங்கை
அதிர்ச்சியளிக்கும் பாபா வங்காவின் கணிப்பு ; வீழ்ச்சியடைந்த விமான முன்பதிவுகள்

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்காவின் கணிப்பு ; வீழ்ச்சியடைந்த விமான முன்பதிவுகள்
எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர்.
அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவராவார்.
இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகியுள்ளது.
இந்தநிலையில் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின், ஜப்பான் தொடர்பான தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நில அதிர்வு மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.
பாபா வங்காவின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாபா வங்காவின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.