சினிமா
இனிமே வரவே கூடாதுன்னு சேரனை கழுத்தை பிடித்து தள்ளிய இயக்குநர்!! நடிகர் சொன்ன ரகசியம்..

இனிமே வரவே கூடாதுன்னு சேரனை கழுத்தை பிடித்து தள்ளிய இயக்குநர்!! நடிகர் சொன்ன ரகசியம்..
உணர்வுப்பூர்வமான குடும்ப படங்களை இயக்கி சிறப்பான பங்களிப்பை தமிழ் சினிமாவில் வழங்கியவர் தான் இயக்குநர் சேரன். அப்படிப்பட்ட இயக்குநர் சந்தித்த அவமானம் குறித்து நடிகர் சரவணன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.அதில், சேரன் ஒரு காலத்தில் ஹீரோவாக மாறினாலும் தொடக்கத்தில் அவர் உதவி இயக்குநர். சூரியன் சந்திரன் படத்தின் ஷூட்டிங்கின் போது யூனிட்டுக்குள் வந்த சேரனை கே எஸ் ரவிக்குமார், இனிமே நீ வரக்கூடாதுன்னு சொல்லி கழுத்தைப்பிடித்து வெளியேற்றினார்.அந்நேரத்தில் சேரனை மீண்டும் சேர்த்துக்கொள்வதற்கு சமாதானம் செய்யுமாறு சிலர் தன்னிடம் கேட்டனர். சேரனை மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு கே எஸ் ரவிக்குமாரிடம் நான் கூறினேன்.ஆனால் அவர் உடனே ஏற்கவில்லை. மாறாக சேரனிடம் சாப்பாடு பரிமாறும் வேலையை செய்யச்சொன்னார் ரவிக்குமார். மூன்று நாட்களுக்கு அந்த வேலையை செய்தப்பின் சேரனை மீண்டும் உதவி இயக்குநராக ஏற்றுக்கொண்டார் கே எஸ் ரவிக்குமார் என்று சரவணன் உண்மையை கூறியிருக்கிறார்.