Connect with us

சினிமா

உலக சாதனை படைத்த ” டூரிஸ்ட் பேமிலி ” டாப் 10 லிஸ்டில் எத்தனையாவது தெரியுமா ?

Published

on

Loading

உலக சாதனை படைத்த ” டூரிஸ்ட் பேமிலி ” டாப் 10 லிஸ்டில் எத்தனையாவது தெரியுமா ?

2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவை கலக்கிய திரைப்படங்களில் முக்கியமான படம் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கையில் இருக்கும் குடும்பம் இந்தியாவில் வந்து சந்திக்கும் பிரச்சனைகளை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சசிகுமார், சிம்ரன் உடன் இணைந்து ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையின் உணர்வுபூர்வமான தருணங்களையும் தீவிரமான பரிமாணத்தில் சொல்லிய படம் என்பதால் பலரது மனங்களையும் தொட்டது.திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் உலகளவில் ரூ. 91 கோடிக்கு மேல் வசூல் செய்து 2025ஆம் ஆண்டில் வெளியான ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அடையாளம் பதிந்துள்ளது. இந்த நிலையில் உலகளவில் உள்ள விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை பகிரும் முக்கியமான தளங்களில் ஒன்று Letterboxd. அந்த தளத்தில் 2025ஆம் ஆண்டு இதுவரை வெளியான திரைப்படங்களில் டாப் 10 சிறந்த படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த பட்டியலில் முதலிடத்தை ‘Sinners’ திரைப்படம் பிடித்துள்ள நிலையில், 9வது இடத்தில் தமிழ்த் திரைப்படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த பட்டியலில் இந்திய சினிமாவைச் சேர்ந்த ஒரே திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமிலி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன