சினிமா
ஊருக்கு உபதேசம் மகனுக்கு இல்லை..! சர்ச்சையை கிளப்பிய சூர்யா சேதுபதி…

ஊருக்கு உபதேசம் மகனுக்கு இல்லை..! சர்ச்சையை கிளப்பிய சூர்யா சேதுபதி…
பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகிய பீனிக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தற்போது படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யா சேதுபதி பத்திரிகையாளரிடம் நடந்து கொண்ட விதம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது இவர் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு ஒரு தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மேலும் பல நெட்டிசன்கள் விஜய் சேதுபதி மைக் பிடித்து ஊருக்கு உபதேசம் உடனே செய்வார். ஆனால் மகனை ஒழுங்காக வளர்க்கவில்லை என கூறி வருகின்றனர். படம் என்னதான் நல்லா இருந்தாலும் பத்திரிகையாளர்களை பகைத்தால் முன்னேற முடியாது என விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.மேலும் இவர் செய்த இந்த விடயத்திற்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டால் தான் சரியாக இருக்கும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.