பொழுதுபோக்கு
என் பாட்டி பெயர் தான் ஃபர்ஸ்ட்; இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க தான் ஆசை; குஷ்பு மகள் ஓபன் டாக்!

என் பாட்டி பெயர் தான் ஃபர்ஸ்ட்; இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க தான் ஆசை; குஷ்பு மகள் ஓபன் டாக்!
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் மகள் அவந்திகா தனது கையில் போட்டுள்ள டாட்டூக்கள் குறித்து நேர்காணலில் விளக்கம் அளித்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. தற்போது நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலில் தீவிரமாக செயலாற்றி வரும் இவர், பாஜக நிர்வாகியாக தொடர்ந்து கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், தமிழ் சினிமாவின் காமெடி இயக்குனர் சுந்தர்.சி-யை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை குஷ்புக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.குஷ்புவை போலவே அவரது மகள்களும் குண்டாக இருந்ததால் உருவ கேலியை எதிர்கொண்ட நிலையில், இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொண்டுள்ளனர். அதேபோல் குண்டாக இருந்த நடிகை குஷ்புவும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின் உடல் எடையை குறைத்துள்ளார். குஷ்புவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் இளமைக்கு திரும்பியுள்ளார் என்று கூறிவந்தனர்.இதனிடையே, குஷ்புவின் மகள் அனந்திகா, சமீபத்தில் வெளியான தக் லைப் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேபோல் மற்றொரு மகள், அவந்திகா, விரைவில் சினிமாவில் என்ட்ரி ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது அவர், புரோவிகே யூடியூப் சேனலுக்கு அளித்த தனது கையில் போட்டுள்ள டாட்டூக்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.நல்ல கதைகளை எதிர்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக ஹாரார் ஸ்டோரி எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. எல்லா வகையாக கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காமெடி. ஹாரார், ரொமான்ஸ் என எல்லாவை கேரக்டரிலும் நடிக்க விரும்புகிறேன். சிறுவயதில் இருந்து இப்போது வரை டாட்டூ போடுவது எனக்கு பிடிக்கும். இப்போ வரை டாட்டூ போட்டுக்கொண்டு இருக்கிறேன்.நான் முதன் முதலில் போட்ட டாட்டூ என் பாட்டியின் பெயர் தான். என் அம்மாவின் அம்மா பெயர். விடுமுறை தினத்தில் என் நண்பர்களுடன் இருந்தபோது டாட்டூக்கள் போட்டிருக்கிறேன். கையில், என் செல்லப்பிராணி நாய் டாட்டூ இருக்கிறது. ஹை ஸ்கூலில் படிக்கும்போது எனக்கு பிடித்த கோடு டாட்டூ போட்டேன். உடலில் இருக்கும் அனைத்து டாட்டூவுக்கும் மீனிங் கேட்டால் எனக்கே தெரியாது. அனைத்தும் மறந்துபோச்சு என்று கூறியுள்ளார்.