பொழுதுபோக்கு
கணேசா இவங்களோட சேராதே… ஓசி அல்வா சாப்பிட்ட சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த எச்சரிக்கை!

கணேசா இவங்களோட சேராதே… ஓசி அல்வா சாப்பிட்ட சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த எச்சரிக்கை!
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தாலும், இருவருக்கும் இடையேயான நட்பு, மிகவுமு் நெருக்கமானது என்று சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர், 2-வது நாயகனாக நடித்திருந்த எம்.ஜி.ஆர் 10 வருட போராடத்திற்கு பிறகு சினிமாவில் நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகு ஒரு முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்த எம்.ஜி.ஆர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இயக்குனர் தயாரிப்பாளர் என பல அவதாரங்களையும் எடுத்து வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர்.அதேபோல், நாடக நடிகராக இருந்தாலும், பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன். அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சிவாஜி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரின் படங்களில் நடிப்புகக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இருக்கும். அதே சமயம் எம்.ஜி.ஆர் படங்கள் ஆக்ஷன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வந்தது.சினிமாவில் வெவ்வேறு காலக்கட்டத்தில் அறிமுகமாகி இருந்தாலும், எம்.ஜி.ஆர் சிவாஜி இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், எம்.ஜி.ஆர் துணை நடிகராக இருந்தபோதும், சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வராதபோதும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. 1943-ம் ஆண்டு தான் சிவாஜிகணேசன் முதன் முதலாக எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் சினிமாவில் துணை நடிகராகவும், சிவாஜி நாடகங்களிலும் நடித்து வந்த காலக்கட்டம்.சிவாஜியின் நாடக குழுவை சந்திக்கும்போது அவர்களுக்கு பூரி கிழங்கு டிபன் வாங்கி கொடுப்பது எம்.ஜி.ஆரின் வழக்கமாக இருந்துள்ளது. இதை வைத்து ஒருநாள் நாடக குழுவினர் எம்.ஜி.ஆரை சாப்பிட அழைத்துள்ளனர். அப்போது எம்.ஜி.ஆர், கணேசா (சிவாஜி கணேசன்) நீயூம் வா என்று அழைத்து சென்றுள்ளார். அங்கே டிபன் கடையில் அனைவருக்கும் டிபனுடன் சேர்த்து அல்வாவும் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த எம்.ஜி.ஆர் டிபன் மட்டும் தானே இது என்ன அல்வா என்று கேட்க, இல்லனே சர்வர் பையனுக்கு நாடகம் பார்க்க இலவச டிக்கெட் கொடுப்போம். அதற்காக இது. இதற்கு பில் இல்லை என்று கூறியுள்ளனர்.இதை கேட்ட எம்.ஜி.ஆர் என்ன சொல்றீங்க, அப்போ தினமும் இப்படித்தான் சாப்பிடுகிறீர்களா? என்ன கணேசா நீயுமா இப்படி என்று கேட்க, சிவாஜி நான் இன்றுதான் இவர்களுடன் வருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் உன் முதலாளியிடம் சொல்லிவிடுவேன் என்று அந்த சர்வரிடம் சொல்ல, அவர் அழுதுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அல்வாக்கு நான் பணம் கொடுக்கிறேன். டிபனுக்கு நீங்கள் பணம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பணத்தையும் கொடுத்துள்ளார்.சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் வந்த எம்.ஜி.ஆர் சிவாஜியை அழைத்து கணேசா இவங்களோட சேரதா உனக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிடுவார்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த தகவலை மறைந்த நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.