பொழுதுபோக்கு
சாரட்டு வண்டியா அது… இவ்ளோ நாளாக நான் சரக்கு வண்டினு நினைச்சேன்: காற்று வெளியிடை பாட்டை கண்டம் செய்த சீரியல் நடிகை!

சாரட்டு வண்டியா அது… இவ்ளோ நாளாக நான் சரக்கு வண்டினு நினைச்சேன்: காற்று வெளியிடை பாட்டை கண்டம் செய்த சீரியல் நடிகை!
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்வேதா, பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் நேர்காணல் அளித்துள்ளார். இதில் இடம்பெற்ற சில க்யூட்டான தொகுப்பை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.சமீப காலமாக, நடிகை ஸ்வேதா தனது சமூக ஊடக பக்கத்தில் சமையல் தொடர்பாக பதிவிட்டு வருகிறார். இதனால், அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. ஆனால், அந்த தகவலுக்கு ஸ்வேதா மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் கலந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.இது தவிர படப்பிடிப்பின் போது மிகவும் இயல்பாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பதாக ஸ்வேதா கூறுகிறார். இதன் காரணமாக இயக்குநரிடமிருந்து சில நேரங்களில் செல்லமாக திட்டு வாங்குவது கூட நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு ஜாலியாக மொத்த யூனிட்டும் பணியாற்றுவார்கள் என்று அவர் கூறுகிறார்.மேலும், தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தனது சக நடிகை மற்றும் தோழியின் திருமணத்தின் சங்கீத் நிகழ்வில் பாடலுக்கு நடனமாடுவதற்காக ஆர்வமாக இருப்பதாக நேர்காணலில் ஸ்வேதா குறிப்பிட்டுள்ளார். அப்போது, ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் இடம்பெற்ற சாரட்டு வண்டியில் பாடலை தெரியாமல் சரக்கு வண்டியில் என்று ஸ்வேதா பாடி விட்டார். இத்தனை நாட்களாக அப்பாடலை சரக்கு வண்டியில் என்றே, தான் நினைத்துக் கொண்டிருந்ததாக ஸ்வேதா தெரிவித்தார். இதனால் மொத்த நேர்காணலும் பார்ப்பதற்கு செம்ம க்யூட்டாக அமைந்தது.