இலங்கை
சுகாதார சேவை சமூகத்திற்கான தேவை ; பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டி

சுகாதார சேவை சமூகத்திற்கான தேவை ; பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டி
சுகாதார சேவை என்பது வெறுமனே சேவை அல்ல என்றும் அது, சமூகத்திற்கான தேவை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிக்கின்றார்.
நல்லாட்சியைப் போன்றே, சமூக தேவையையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் முக்கிய விடயம் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற, இலங்கை மருத்துவ சங்கத்தின், நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.
மருத்துவ கல்வியின் ஊடாக, மனிதாபிமான, உணர்வுபூர்வமிக்க, நெறிமுறை சார்ந்த முழுமையான மருத்துவர்களை உருவாக்குவது எவ்வாறு என்பது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு, பிரதமர் இதன்போது கோரியுள்ளார்.
இதேவேளை, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான மருத்துவ சேவையைப் பரிமாற்றத்தின் போது, ஒழுங்குபடுத்தல்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.