பொழுதுபோக்கு
ட்ரெண்டிங் டிரஸ்ஸில் கலக்கிய கீர்த்தி சுரேஷ்: விஜய் கட்சி பெயரை கூறி கோஷம் எழுப்பிய ரசிகர்கள்

ட்ரெண்டிங் டிரஸ்ஸில் கலக்கிய கீர்த்தி சுரேஷ்: விஜய் கட்சி பெயரை கூறி கோஷம் எழுப்பிய ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ஈரோட்டில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பவரும் டி.வி.கே. டி.வி.கே என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது கீர்த்தி சுரேஷ் ஹார்டின் செய்கை காட்டி அசத்தியுள்ளார்.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், திருணத்திற்கு பிறகு பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜயுடன் பைரவா, சர்கார் என இரு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக விஜய் தனி விமானத்தில் த்ரிஷா உள்ளிட்ட தனது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் பங்கேற்ற தகவல் இணையத்தில் தற்போதுவரை அதிகம் பேசப்பட்டு வருகிறது.இதனிடையே, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் உப்பு கம்புராம்பு என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் ஈரோட்டில் ஒரு மொபைல்ஷாப் திறப்பு விழாவுக்காக இன்று வந்திருந்தார். திறப்பு விழாவின்போது, கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அவர், குத்துவிளக்கேற்றி கடையின் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்த திறப்பு விழாவில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.A post shared by Actress point 👉 (@actressz_point)இதனைத் தொடர்ந்து அவர்களிடம் உரையாற்றிய கீர்த்தி சுரேஷ், ” முதல்முறையாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளேன். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, ஈரோட்டில் ஸ்பெஷல் என்ன என்று அவர் கேட்க, அதற்கு அனைவரும் “மஞ்சள்” என்றனர். அதன்பிறகு, அனைவரும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். உள்ளே அழகாக இருந்தால், வெளியே அழகாக தெரிவோம் என்று கூறினார்.A post shared by Actress point 👉 (@actressz_point)கீர்த்தி சுரேஷ் பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் பலரும், டி.வி.கே. டி.வி.கே என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கேட்ட கீர்த்தி சுரேஷ், ரசிகர்களுக்கு தனது கையால் ஹார்ட்டின் செய்கையை காட்டினார். பின் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். கீர்த்தி சுரேஷை காண ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.