பொழுதுபோக்கு
நடிகர் திலகத்திடம் நடித்து காட்டிய கே.எஸ்.ரவிக்குமார்; கடைசியில் சிவாஜி சொன்ன ஒற்றை வார்த்தை: ஆஸ்காருக்கு சமமாம்!

நடிகர் திலகத்திடம் நடித்து காட்டிய கே.எஸ்.ரவிக்குமார்; கடைசியில் சிவாஜி சொன்ன ஒற்றை வார்த்தை: ஆஸ்காருக்கு சமமாம்!
தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். எல்லாவிதமாக கேரக்டர்களிலும் நடித்து அசத்தியுள்ள இவர், சிறப்பாக நடிக்கும் நடிகர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிக்கவும் தயங்குவதில்லை. அந்த வகையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிவாஜியிடம் தான் பாராட்டு பெற்ற சம்பவம் கூறித்து பேசியுள்ளார்தமிழ் சினிமாவின் பட்ஜெட் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு பிடித்த இயக்குனர் என்று அழைக்கப்படும் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவருக்கும் நெருக்கமானவர். இவரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ள கே.எஸ்.ரவிக்குமார் சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்கிய படம் தான் படையப்பா. ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், மணிவண்ணன், நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.படத்தின் சிவாஜியின் தம்பியான மணிவண்ணன் சொத்துக்களை எழுதி கேட்க, சிவாஜி தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி கொடுப்பார். அப்போது தனது மகளாக நடித்த சித்தாரா கையெழுத்து போடும்போது மட்டும் அழ வேண்டும். இந்த காட்சியை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் விளக்கி சொல்லும்போது, நடந்த சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.சிவாஜி சார் வந்து கையெழுத்துப் போட்டு தம்பிக்குச் சொத்து எல்லாம் கொடுப்பார் என்று அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறர்கள். லக்ஷ்மி வந்து கையெழுத்துப் போடுகிறார். சித்தாராரா வந்து கையெழுத்துப் போடுகிறார். சிதாரா தலையில் கை வைக்கிறீர்கள். கேமரா உங்களை நோக்கி வருகிறது. உங்கள் கண்ணிலிருந்து தண்ணீர் வருகிறது. என் பையன் கையெழுத்துப் போடும்போது நான் அழவில்லை. என் மனைவி கையெழுத்துப் போடும்போது நான் அழவில்லை. அப்போது சித்தாராவுக்கும் ஏன் அழ வேண்டும் என்று கேட்டார்.அவர் உங்க பொண்ணு சார். அவன் பையன் எப்படியாவது பிழைத்துக்கொள்வான். நீ பொண்ணு, சொத்து எல்லாம் எழுதி கொடுத்துவிட்டேன். உன்னை எப்படி கரைசேர்க்க போகிறேன் என்று தெரியவில்லையே என்று நினைத்து அழுகிறீர்கள் சார் என்று சொன்னேன். அவர் நடித்து காட்டுவியா என்று கேட்டார். சரி சார் என்று நான் நடிக்க ஆரம்பித்தேன். நடித்து முடித்தவுடன் டேய் டைரக்டர் இங்க வாடா, யாரை நினைத்து நடிச்சே என்று கேட்டார். என் பொண்ணை நினைத்து நடிச்சேன் என்று சொன்னேன். அதன்பிறகு நடித்தார்.அதன்பிறகு ரஜினி சாரிடம் சொல்லி இருக்கிறார். இவன் டைரக்டர் மட்டும் இல்லடா நல்ல நடிகன் டா என்று கூறியுள்ளார். இது எனக்கு ஆஸ்கார் விருது வாங்கியது போல் இருந்தது என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்