உலகம்
புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக அறிவித்த மஸ்க்!

புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக அறிவித்த மஸ்க்!
டிரம்பின் “பெரிய, அழகான” வரி மசோதா அமெரிக்காவை திவாலாக்கும் என்று கூறி ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக தொழில் அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு புதிய அமெரிக்க அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமா என்று தனது X தளத்தில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் தனது சுய பாணியிலான “பெரிய, அழகான” வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை