சினிமா
புற்றுநோயால் இறந்த அப்பா..அவரிடம் உண்மையை மறைச்சிட்டேன்!! வெளிப்படையாக கூறிய மிர்ச்சி சிவா..

புற்றுநோயால் இறந்த அப்பா..அவரிடம் உண்மையை மறைச்சிட்டேன்!! வெளிப்படையாக கூறிய மிர்ச்சி சிவா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடும் புகழப்பட்டு வருபவர் தான் நடிகர் மிர்ச்சி சிவா. ஆர்ஜே-வாக பணியாற்றி அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த மிர்ச்சி சிவா, இயக்குநர் சிவா இயக்கத்தில் பறந்து போ என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் மிர்ச்சி சிவா மற்றும் படக்குழுவினர், விஜய் டிவியில் தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சிவா கலந்து கொண்டிருக்கிறார்.இந்த வார எபிசோட்டில், அப்பா அம்மா, நீங்க அதிகமா பொய் சொல்றீங்க என்ற தலைப்பில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை வைத்து விவாதிக்கப்பட்டது.அப்போது பேசிய மிர்ச்சி சிவா, இதுவரைக்கும் யாரிடமும் சொல்லவில்லை, இதுதான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதை சொல்கிறேன். based on true story ஒன்று இருக்கிறது போது என் அப்பாவுக்கு நடந்து இருக்கிறது.என் அப்பாவுக்கு கேன்சர் இருந்தது. 6 மாதம் தான் உயிரோடு இருப்பார் என்பதால், அதை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதனால் அவரிடம் இதை சொல்லாமல் இருந்தோம். ஆனால் 6 வருஷம் இல்லை, அவர் இருக்கும் போது மகிழ்ச்சியா இருந்தாரு, 4 மாதம் மட்டும் தான் இருந்தார். அது பெரிய பொய் தான், அதான் வேணும் என்று மிர்ச்சி சிவா கவலையை மனதிற்குள் வைத்துக்கொண்டு பகிர்ந்துள்ளார்.