சினிமா
வேண்டாம்னு சொன்ன இயக்குநர் கூடவே பொண்டாட்டியா நடிச்சேன்!! டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவி…

வேண்டாம்னு சொன்ன இயக்குநர் கூடவே பொண்டாட்டியா நடிச்சேன்!! டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவி…
90களில் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்து பிரபலமானவர் ஸ்ரீஜா ரவி. அந்தகாலக்கட்டத்தில் அம்மா எப்படி நடிகைகளுக்கு டப் கொடுத்தாரோ, தற்போது நடிகைகளுக்கு அவரது மகள் ரவீனா ரவி குரல் கொடுத்து மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.சமீபத்தில் அம்மாவும் மகளும் இணைந்து பேட்டியளித்து பல விஷயங்கலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில்பேசிய ஸ்ரீராஜா ரவி, 1972ல் நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினேன்.என் அம்மாவுக்கு ஹீரோயின் ஆகவேண்டும் என்று ஆசை,16 வயதில் நான் ரொம்ப ஒல்லியாக இருந்தேன். அந்த சமயத்தில் பாரதிராஜா சாரின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன்.அப்போது பாரதி ராஜா சார் என்னிடம், இந்த பக்கம் திரும்பு, அந்த பக்கம் திரும்பு என்று கூறி பார்த்தார். பின் என்னம்மா 16 வயது பொண்ணுன்னு சொல்ற, இப்படி ஒல்லியா இருக்க என்று ரிஜக்ட் பண்ணிவிட்டார்.அதன்பின் காதலே காதலே படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடித்தேன். அப்போது அவரிடம், என்ன ரிஜெக்ட் பண்ணிங்க, இப்போ உங்களுக்கு பொண்டாட்டியா நடிக்கிறேன் என்று காமெடியாக பேசினேன் என்று ஸ்ரீஜா ரவி தெரிவித்துள்ளார்.