இலங்கை
புதிய அரசியலமைப்பு; அரசுக்கு இயலுமையில்லை

புதிய அரசியலமைப்பு; அரசுக்கு இயலுமையில்லை
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் இயலுமை இந்த அரசாங்கத்துக்குக் கிடையாது என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த நாட்டைத்தான் நாங்கள் பொறுப்பேற்றோம். பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த கடுமையான தீர்மானங்களினால் தான் நிதி வங்குரோத்து நிலையில் இருந்து நாடு குறுகிய காலத்துக்குள் மீட்சிபெற்றது.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பல சட்டமூலங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அதற்கான பணிகள் விரிவாக ஆராயப்பட வேண்டும். அதற்கு நீண்டதொரு காலம் தேவைப்படும். இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காது என்பது தெளிவாகத் தோன்றுகிறது. ஆரம்பகட்டப் பணிகளைத் தற்போது ஆரம்பித்தால் இரண்டு ஆண்டுக்குள் யாப்பினை உருவாக்கமுடியும் – என்றார்.