சினிமா
அதிரடியாக வெளியான தனுஷின் அடுத்த பட அப்டேட்..! ஹீரோயினி யார் தெரியுமா.?

அதிரடியாக வெளியான தனுஷின் அடுத்த பட அப்டேட்..! ஹீரோயினி யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது 54வது திரைப்படத்திற்கான வேலைகளை அதிகாரபூர்வமாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் பூஜை விழா வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றும், படப்பிடிப்பு ஜூலை 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக மலையாள சினிமா நடிகை மமிதா பையூ தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தற்போது ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. தனுஷ், ஏற்கனவே பல படங்களில் பிஸியாக இருப்பதுடன், OTT புரொஜெக்ட் மற்றும் இசைப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.அந்த வரிசையில், தற்போது தனுஷ் 54 என குறிக்கப்படும் இந்த புதிய படம், குடும்பம் மற்றும் காதலை மையமாகக் கொண்ட கதையாக உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் காலங்களிலேயே வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.