உலகம்
அமெரிக்காவில் நடந்த வாகன விபத்தில் இந்திய வம்சாவளி குடும்பம் மரணம்

அமெரிக்காவில் நடந்த வாகன விபத்தில் இந்திய வம்சாவளி குடும்பம் மரணம்
அமெரிக்காவின் டல்லாஸில் நேற்று இரவு ஒரு லாரி மோதிய விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு குடும்பமே தீயில் கருகி உயிரிழந்தனர்.
ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்குடும்பம் அட்லாண்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் டல்லாஸ் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது கார் தீப்பிடித்து இருந்ததில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை