பொழுதுபோக்கு
எவ்ளோ உயரம் போனாலும் இது மிக முக்கியம்; பெண்களுக்கு விசித்ரா கொடுத்த அட்வைஸ்!

எவ்ளோ உயரம் போனாலும் இது மிக முக்கியம்; பெண்களுக்கு விசித்ரா கொடுத்த அட்வைஸ்!
வாழ்க்கையில் திருமணம் நடக்குமா என்று யோசித்தேன். ஒரு கட்டத்தில் திருமணமே வேண்டாம் என்று நினைத்த எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்துள்ளது என்று நடிகை விசித்ரா பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுடன் பல காமெடி காட்சிகளிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை விசித்ரா. 1991-ம் ஆண்டு வெளியான பொற்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சத்யராஜுன் 100-வது படமாக வில்லாதி வில்லன் படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் விசித்ரா நடித்துள்ளார்.திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய விசித்ரா தற்போது மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட விசித்ரா பங்கேற்றிருந்தார். இதில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், எதனால் தான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று பேசியிருந்தார். விசித்ராவின் இந்த பதிவு பலரின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில், சமீபத்தில், கலாட்ட யூடியூப் சேனலில், தனது குடும்பத்துடன் பங்கேற்றுள்ள விசித்ரா, தனது கணவர் மற்றும் 3 மகன்கள் குறித்து உருக்கமான சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், எனக்கு திருமணம் நடக்குமா என்று நான் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நாம் திருமணமே செய்துகொள்ள வேண்டாம். சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று நினைத்தேன். எனது கணவர் என்னிடம் பலமுறை கேட்டபோது கூட இந்த கல்யாண வாழ்க்கையை சரியாக பார்த்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.எந்த பெண்ணும் எப்பேர்ப்பட்ட உயரத்தில் இருந்தாலும், உங்களுக்கென்று அன்பு காட்ட ஒரு கணவரும், உங்களுக்கென்று ஒரு உலகமும், குழந்தைகளும் இருக்கும் மகிழ்ச்சி மிகவும் முக்கியமானது. ஆனால் இப்போது பலரும் அப்படி நினைப்பது கிடையாது. எவ்வளவு தான் பணம் புகழ், வெற்றி என எதுவாக இருந்தாலும், உங்கள் குடும்பத்துடன் தான் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த மேடையில் என் கணவர் என் குழந்தைகள் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.