இலங்கை
கொழும்பு – பிலியந்தலை குப்பை மேட்டில் தீ விபத்து

கொழும்பு – பிலியந்தலை குப்பை மேட்டில் தீ விபத்து
கொழும்பு – பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்ப படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.