இலங்கை
சுட்டு கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர் ; குற்றத்தின் முக்கிய புள்ளி கைது

சுட்டு கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர் ; குற்றத்தின் முக்கிய புள்ளி கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர் என்று கூறப்படும் ஆமி உபுல் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரரான ஆமி உபுல், கடந்த வியாழக்கிழமை (03) இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.