இலங்கை
செம்மணிப் புதைகுழியில் புதிதாக ஐந்து சிதிலங்கள்; இதுவரை 52 சிதிலங்கள்

செம்மணிப் புதைகுழியில் புதிதாக ஐந்து சிதிலங்கள்; இதுவரை 52 சிதிலங்கள்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது, மேலும் ஐந்து என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்தால் செம்மணிப் புதைகுழியில் இதுவரை 52 சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் பன்னிரெண்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன. இதன் போதே, மேலும் ஐந்து சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 52 மனிதச் சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 47 சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆடைகள் உள்ளிட்ட சில சான்றுப் பொருள்களும் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.