Connect with us

இலங்கை

செம்மணி புதைகுழி பிரதேசம் குற்ற பிரதேசமே; சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல்

Published

on

Loading

செம்மணி புதைகுழி பிரதேசம் குற்ற பிரதேசமே; சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல்

  யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது என சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்

Advertisement

நேற்றைய நாள் அகழ்வின் முடிவில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இன்றைய தினம் 12வது நாளாகவும் அகழ்வு நடைபெற்றது, நிபுணர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையை சேர்ந்த மாணவர்களும் அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புதியதொரு இடத்தையும் கண்டுபிடித்து அகழ்வாராச்சி இடம்பெறுகின்றது.

Advertisement

இதில் மீட்கப்பட்டுள்ள கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் யாவுமே ஒரு குறைந்தளவு – அதாவது ஒன்றரையடிக்குள்ளான ஒரு இடத்தில் புதைத்திருக்கின்றார்கள்.

இது சாதாரணமாக உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக தெரியவில்லை, மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக தெரியவில்லை, அதற்கு மாறாக ஏனோதானோ என்று அவசர அவசரமாக சடுதியாக செய்யப்பட்ட விடயமாக தெரிகின்றது.

சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Advertisement

ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது.

எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது .

இந்த விடயத்தில் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.   

Advertisement

அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது டன் 47 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பன்னிரண்டாம் நாளான திங்கட்கிழமை(14) அன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதேவேளை மனித புதைகுழி அகழும் இடத்தில் துணிகளை ஒத்த சில பொருட்களும் அடையாளம் காணப்பட்டது.

Advertisement

அத்துடன் செய்மதிப் படம் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன