இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையவழி சேவை நிறுத்தம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையவழி சேவை நிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இணையவழிச்சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நேற்று முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்புகள், ஒன்லைன் பதிவு, வாக்காளர் அறிவிப்புகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட அனைத்து இணையவழிச் சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.