உலகம்
விமான நிலையத்தில் ஆங்கிலம் பேசாத இந்திய பணியாளர்களை நீக்க கோரிய இங்கிலாந்து பெண்

விமான நிலையத்தில் ஆங்கிலம் பேசாத இந்திய பணியாளர்களை நீக்க கோரிய இங்கிலாந்து பெண்
லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த விமான நிலையத்தில் வந்திறங்கிய இங்கிலாந்து பெண்மணி லூசி ஒயிட், அங்கு வேலை செய்யும் இந்திய பணியாளர்களை சரமாரியாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக, லூசி ஒயிட் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனித்தேன்.
அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசவில்லை. அவர்கள் தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என குற்றம் சாட்டினர்.
அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் நுழையும் முதல் இடத்தில் வேலை செய்கிறார்கள்?
அவர்கள் அனைவரையும் நாடு கடத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து பெண்மணியின் இந்தப் பதிவைக் கண்டித்து வலைதளவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை