இலங்கை
ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்கிய நீதின்றம்

ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்கிய நீதின்றம்
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராஜ வேண்டும் என்ற நிபந்தனையும் அளிக்கப்பட்டுள்ளது.
கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் ஸ்ரீகாந்த் நடிகா் கிருஷ்ணா, கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து இருவா் தரப்பிலும், பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள் நீதிபதி நிா்மல்குமார் முன்பு இன்று(ஜூலை 8) விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.