Connect with us

பொழுதுபோக்கு

அப்பாவுக்கு செம ஹிட்டு; மகனுக்கு மெகாஹிட்டு: அப்பா பட பாட்டை ரீமேக் செய்து வெற்றி பெற்ற மகன்கள்!

Published

on

Simbu NAjh

Loading

அப்பாவுக்கு செம ஹிட்டு; மகனுக்கு மெகாஹிட்டு: அப்பா பட பாட்டை ரீமேக் செய்து வெற்றி பெற்ற மகன்கள்!

சினிமாவில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வது போல் பழைய ஹிட் பாடல்களை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப இசையமைத்து ரீமேக் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில், அப்பா நடித்து பெரிய ஹிட்டான பாடலை மகன் ரீமேக் செய்து ஹிட் கொடுத்த 3 நடிகர்களை இந்த பட்டியலில் பார்ப்போம்.டி.ராஜேந்தர் – சிம்பு1986-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படம் மைதிலி என்னை காதலி. நடிகை அமலா அறிமுகமான இந்த படத்தில், வரும் அட பொன்னான மனசே என்ற பாடலில் நடிகர் சிம்பு நடித்திருப்பார். அதேபோல் இந்த படத்தில் வரும் ‘என் ஆசை மைதிலியே’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. டி.ஆர் எழுதி இசையமைத்திருந்த இந்த பாடல், சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருக்கும். சிம்பு கதை திரைக்கதை எழுதிய மன்மதன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார், இந்த படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்போது என் ஆசை மைதிலியே என்று சொன்னால் அது சிம்பு பாடல் தான் என்று இன்றைய ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இந்த பாடல் பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது.பாக்யராஜ் – சாந்தனு1988-ம் ஆண்டு பாக்யராஜ் கதை திரைக்கதை எழுதி பாலக்குமாரன் இயக்கத்தில் வெளியான படம் இது நம்ம ஆளு. பாக்யராஜ் ஷோபானா இணைந்து நடித்த இந்த படத்திற்கு, பாக்யராஜ் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்துது. அதிலும் குறிப்பாக, இந்த படத்தில் இடம் பெற்ற நான் ஆளான தாமரை என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாலி எழுதிய இந்த பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்.இந்த பாடல் சாந்தனு நடிப்பில் வெளியான, சித்து பிளஸ் 2 என்ற படத்தில் இந்த பாடலை ரீமேக் செய்திருப்பார்கள். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பழைய பாடலை மறக்கடிக்கும் வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற நான் ஆளான தாமரை பாடல் ரசிகர்களை கவரவில்லை.தியாகராஜன் – பிரஷாந்த்1983-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் தியாகராஜன் நடித்த படம் மலையூர் மம்பட்டியான். தியாகராஜனுடன் சரிதா, ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார், படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, சின்னப்பொண்ணு சேல, காட்டு வழி போற பொண்ணே ஆகிய 2 பாடல்களும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மலையூர் மம்பட்டியான் படத்தை தனது மகன் பிரஷாந்த் நடிப்பில் தியாகராஜன் ரீமேக் செய்திருந்தார். 2011-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சின்னப்பொண்ணு சேல, காட்டு வழி போற பொண்ணே ஆகிய 2 பாடல்களும் ரீமேக் செய்யப்பட்டிருக்கும். இந்த படத்திலும் அந்த இரு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மம்பட்டியான் பாடல் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன