பொழுதுபோக்கு
இஞ்சி இடுப்பழகி லைனே இல்ல; இதுக்கு இந்தி பாட்டு தான் இன்ஸ்பிரேஷன்: தேவர்மகன் பாட்டு உருவானது இப்படி!

இஞ்சி இடுப்பழகி லைனே இல்ல; இதுக்கு இந்தி பாட்டு தான் இன்ஸ்பிரேஷன்: தேவர்மகன் பாட்டு உருவானது இப்படி!
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் எண்ணிலடங்காத திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சில படங்கள் மட்டும் தான் கல்ட் கிளாஸிக் அந்தஸ்தை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.அந்த பெருமை தேவர் மகன் திரைப்படத்திற்கு இருக்கிறது. சினிமா சார்ந்த படிப்புகளில் இன்று வரை தேவர் மகன் திரைப்படத்தின் திரைக்கதையை ஒரு பாடமாக கருதுகின்றனர். அந்த அளவிற்கு அதனை நுட்பமாக கமல்ஹாசன் கையாண்டிருப்பார்.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை பெரும் பலமாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பின்னணி இசையில் தொடங்கி, ஒவ்வொரு பாடலிலும் தனது இசை ஞானத்தின் மூலமாக ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தும் அளவிற்கு இளையராஜா உழைத்திருப்பார்.குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடல் பலருக்கும் ஃபேவரட்டாக உள்ளது. சில பாடல்களை கேட்பதற்கு நன்றாக இருக்கும். சில பாடல்களை காட்சிப்படுத்திய விதம், அப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கும். இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்த கலவையாக இஞ்சி இடுப்பழகி பாடல் அமைந்திருக்கும். அற்புதமான இப்பாடல் உருவான விதம் குறித்து தனது அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் சிலாகித்து பேசி இருப்பார்.அவர் கூறுகையில், “இஞ்சி இடுப்பழகி என்ற வரிகளே அந்தப் பாடலில் முதலில் கிடையாது. ‘ஏ தில் திவானா ஹே’ என்ற ஒரு பாடலின் வரிகள் மற்றும் இசையை குறிப்பிட்டு இதே மாதிரி வேண்டும் என்று இளையராஜாவிடம் கூறினேன்.ஒரு பாடலை எடுத்தக்காட்டாக கூறி அதே மாதிரி பாடல் வேண்டும் என்று நாம் கேட்டால், வழக்கமாக அதே பாணியில் இளையராஜா இசையமைத்துக் கொடுக்க மாட்டார். அதற்கு மாற்றாக, வேறு ஒரு பாணியில் இசையை நமக்கு கொடுக்கும் ஆற்றல் இளையராஜாவிற்கு இருக்கிறது.அப்படி ஒரு இசையை கேட்பதற்கு நமக்கு மிகவும் திருப்தியாக இருக்கும். அந்த வகையில், நான் எடுத்துக்காட்டாக கூறிய பாடலில் இருந்து இஞ்சி இடுப்பழகி பாடல் எவ்வாறு உருவானது என்பதை அருகில் இருந்து நான் பார்த்தேன். ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒரு இசையை அமைத்துக் கொடுத்தார். அவ்வாறு தான் இஞ்சி இடுப்பழகி பாடல் உருவானது” என்று தெரிவித்துள்ளார்.