இலங்கை
கன்னி அமர்விலேயே கடும் அமளி துமளி ; மன்னார் நகரசபையில் குழப்பம்

கன்னி அமர்விலேயே கடும் அமளி துமளி ; மன்னார் நகரசபையில் குழப்பம்
மன்னார் நகரசபையின், கன்னி அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு, முதல்வர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து, நகரசபை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு குழப்பநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதீட்டுக்கு எதிராக நகரசபை உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஏற்பட்ட குழப்பநிலையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், சபை அமர்வை ஒத்தி வைத்தமை தொடர்பில், மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தகவல் வெளியிட்டார்.