பொழுதுபோக்கு
கூப்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீங்க; அனுஷ்கா முன் கார்த்தி வருத்தம்: ஒரு நேர்காணல் சம்பவம்!

கூப்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீங்க; அனுஷ்கா முன் கார்த்தி வருத்தம்: ஒரு நேர்காணல் சம்பவம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி, நடிகை அனுஷ்காவுடன் டிவி நேர்காணலில் பங்கேற்றபோது, என்னை கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீங்க என்று ஆதங்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.அமீர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி, அந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, நான் மகான் அல்ல என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சர்தார் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.அதேபோல் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா, அதன்பிறகு சரியாக வாய்ப்பு இல்லாத நிலையில், தெலுங்கில் கவனம் செலுத்திய அனுஷ்கா, தெலுங்கில் வெளியான அருந்ததி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு, அஜித், விஜய், சூர்யா விக்ரம், உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் காதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.கார்த்தி – அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்திருந்த படம் அலெக்ஸ் பாண்டியன். சுராஜ் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், சந்தானம், மெலிந்த் சோமன், சுமன், விசு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில்,வசூலில் படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், கார்த்தி அனுஷ்கா பங்கேற்க ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் டிடி ஸ்மார்ட் லுக்கிங் ஹீரோ யார் என்று கேட்டு, விஜய் விக்ரம் சூர்யா என்று ஆப்ஷன் கொடுக்க, அதை கேட்ட அனுஷ்கா அந்த பட்டியலில் கார்த்தி இல்லையா என்று கேட்க, சே அப்போ நான் ஸ்மார்ட் லெவலில் இல்லையா? கூப்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீங்க என்று சொல்கிறார். இதை கேட்ட டிடி நீங்க எபபோவுமே ஸ்மார்ட் இவங்ககிட்ட போட்டு வாங்களும் அதுக்காகத்தான் இப்படி கேட்டதாக சொல்கிறார். அப்படி ஆப்ஷன் வச்சாலும் நீங்கதான் ஸ்மார்ட்னு சொல்றாங்க என்று சொல்கிறார்.இதை கேட்ட அனுஷ்கா இறுதியாக விக்ரம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அனுஷ்காவை கடத்தும் கார்த்தி, இறுதியாக அவருக்கு உதவுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.