இலங்கை
சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை நயன்தாரா ; பதிவான மற்றுமொரு வழக்கு

சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை நயன்தாரா ; பதிவான மற்றுமொரு வழக்கு
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமண ஆவணப்படம் “நயன்தாரா பியாண்ட் த பேரி டேல்” (Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
முன்னதாக இந்த திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் காணப்பட்டன.
இது தொடர்பாக நடிகர் தனுஷின் Wunderbar Films 10 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.