இலங்கை
சீனா அதிரடி அறிவிப்பு; 74 நாடுகளுக்கு Visa Free

சீனா அதிரடி அறிவிப்பு; 74 நாடுகளுக்கு Visa Free
சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள் வரை பயணிக்க அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
சீன அரசு இந்த புதிய திட்டத்தை ஜூலை 30ஆம் திகதி முதல் அமலுக்கு கொண்டு வரவுள்ளது.
இதன்படி, பட்டியலிலுள்ள நாடுகளின் குடிமக்கள் சுற்றுலா, தொழில், நண்பர்கள் சந்திப்பு மற்றும் பிற தனிப்பட்ட பயணங்களுக்காக சீனாவிற்கு விசா இன்றி நுழையலாம்.
2024ஆம் ஆண்டில், சீனாவிற்கு விசா இல்லாமல் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2 கோடிக்கு மேல் இருந்தது.
இந்நிலையில் சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க மற்றும் சீனாவின் பன்னாட்டு படிமத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சீன சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளை , சீனாவின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.