Connect with us

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!

Published

on

Meenakshi Dinesh

Loading

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!

மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையை பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். லவ் மேரேஜ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் படத்தில் மீனாட்சியின் கதாபாத்திரம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அனைவரது கவனத்தை. பெற்றுள்ளது.18+ மற்றும் இரட்டா போன்ற வித்யாசமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் மீனாட்சி தினேஷ். அதே போல தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மூலம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்சை பாராட்டியுள்ளனர்.மேலும் மீனாட்சி தினேஷை தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மற்றும் நம்பிக்கைக்குரிய நடிகை என பாராட்டியுள்ளனர். தனது பயணத்தைப் பற்றி மீனாட்சி தினேஷ் பேசுகையில், “தமிழ் ரசிகர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லவ் மேரேஜ் படத்தில் நடித்தது ஒரு புதிய பரிமாணத்தை ஆராய ஒரு சிறப்பான வாய்ப்பாக எனக்கு அமைந்தது. மேலும் என்னை தேர்வு செய்ததற்காக பட குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.பல்வேறுபட்ட மற்றும் சவாலான வேடங்களில் நடிப்பதில் அதிகரித்து வரும் ஆர்வத்துடன், மீனாட்சி தினேஷ் திரைப்படத் துறையில் தனது சொந்த பாதையை வகுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளார். ஸ்டீரியோடைப்களை உடைத்து, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட மீனாட்சி தினேஷ், நடிகர் சூர்யாவின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகை என்றும், நீண்ட நாட்களாக அவரை பின்தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். “சூர்யா சாருடன் பணிபுரிவது எனது கனவு, ஒருநாள் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன், என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி தினேஷ். ஒவ்வொரு படத்திலும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.தென்னிந்திய மொழிகளில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தி வரும் மீனாட்சி தினேஷின் தெளிவான சினிமா பார்வை மற்றும் வலுவான நடிப்பு அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை விரைவாகப் பெற்றுத் தருகிறது. லவ் மேரேஜ் படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ள மீனாட்சி தினேஷ் வரும் காலத்திலும் தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன