இலங்கை
த. வி.பு தலைவர் பிரபாகரன் பாவித்த நிலக்கீழ் பங்கரை தோண்டும் நடவடிக்கை ஆரம்பம்

த. வி.பு தலைவர் பிரபாகரன் பாவித்த நிலக்கீழ் பங்கரை தோண்டும் நடவடிக்கை ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8ம் வட்டாரம் மந்துவில் கிராமத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் போரின் போது முன்னர் விடுதலைப்புலிகளின் தளபதிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் பாவித்ததாக கருதப்படும் நிலக்கீழ் பங்கர் ஒன்றினை தோண்டும் நடவடிக்கையினை 09.07.25 இன்று முன்னெடுத்துள்ளார்கள்
புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
விடுதலைப்புலிகளால் குறித்த தனியாரின் காணி இரண்டு ஏக்கர் வரையிலான காணி விடுதலைப்புலிகளின் முகாமாக காணப்பட்டுள்ளது
இந்த காலட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக பரியளவில் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
2009 ஆம் ஆண்டு போரிற்கு பின்னர் அந்த காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள்.
போரின் குண்டுத்தாக்குதலால் பதுங்கு குழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதால் அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை
இந்த நிலையில் நிலத்தின் கீழ் சுமார் 20 அடி ஆளத்தில் இந்த நிலக்கீழ் பங்கர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலக்கீழ் பங்கரில் விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பி சிலர் வீட்டின் உரிiமையாளர்களுக்கு தெரியாமல் தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை வீட்டின் உரிமையளர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த பகுதியினை பார்வையிட்டுள்ளார்கள்
பாரியளவிலான பங்கர் காணப்படுகின்றமை புலனாகியுள்ளது
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்கு தொடரப்பட்டு (9) இன்று குறித்த பங்கரினை தோண்டும் நடவடிக்கைக்காக கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பி காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கையும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் குறித்த பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளதுடன் தொடர்ந்தும் நாளை (10) அகழ்வு பணிகளை முன்னெடுக்க பொலீசாருக்கு பணித்துள்ளார்
லங்கா4 (Lanka4)
அனுசரணை