Connect with us

சினிமா

நானும் அன்றாடம் காட்சி தான்… பணம் முக்கியமில்லை…! நடிகை வனிதா ஓபன்டாக்.!

Published

on

Loading

நானும் அன்றாடம் காட்சி தான்… பணம் முக்கியமில்லை…! நடிகை வனிதா ஓபன்டாக்.!

தமிழ் சினிமா, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசப்படுகின்ற பிரபலமான நபர் நடிகை வனிதா விஜயகுமார். இவரது நேர்மையான பேச்சுமற்றும் குடும்ப விவகாரங்களில் அவர் பகிரும் தைரியமான கருத்துகள் மூலம் பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் தனது குடும்பம், சொத்து குறித்து ரொம்ப திறந்த மனதோடு பேசியிருந்தார். அந்த உரையாடல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இந்த பேட்டியில் வனிதா, “என்னுடைய சொந்தக்காரங்க எல்லாரும் என் கூட பேசிட்டு தான் இருக்காங்க. 6,7 பேர் தான் ஓவர் ஆக்சன் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காங்க. ஊருக்கெல்லாம் போய் உபதேசம் பண்றாங்க. நீங்க அப்புடி இருக்கீங்களா என்று பாருங்க.” என்று தெரிவித்திருந்தார்.இது அவரின் குடும்பத்தில் சிலர் தான் தன்னை விலக்கியிருப்பதாகவும், பெரும்பாலான உறவினர் இன்னும் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெளிவாகச் சொல்வது போலவே இருக்கிறது. மேலும் அவர் கூறுகிறார்:மேலும், “வருமான ரீதியாக நான் இன்னும் அன்றாடம் காட்சி தான். சின்ன வயசில இருந்தே பணம், காசு எல்லாம் பாத்தாச்சு. அதனால் சொத்து எல்லாம் எனக்கு பெரிய விஷயமா படல.” எனவும் கூறியிருந்தார். வனிதா கூறிய இந்த நேர்காணல் ஒரு உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பாகத் திகழ்கிறது. சொத்து, சம்பாதிப்பு, பிரச்சனை, உணர்ச்சி, உறவு இவையனைத்தையும் கடந்த ஒரு குரலாக காணப்படுகின்றது. சமூகத்தில் பல பெண்கள் குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த நேர்காணல் ஒரு உதாரணமாக இருக்கின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன