சினிமா
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் – கிருஷ்ணா ஜாமீனில் வெளிவந்தனர்..!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் – கிருஷ்ணா ஜாமீனில் வெளிவந்தனர்..!
சென்னையில் கடந்த வாரம் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அவர்களின் கைது திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்வலை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று காலை நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து புழல் சிறையிலிருந்து இருவரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.போதைப்பொருள் வைத்திருந்ததற்காக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விடுதலை விவகாரம் திரையுலகிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.