இலங்கை
போதை ஆசாமியிடம் இரு பொலிஸ் அதிகாரிகள் செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்

போதை ஆசாமியிடம் இரு பொலிஸ் அதிகாரிகள் செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க சந்தேகநபர்களிடமிருந்து 200,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியும் மற்றொரு அதிகாரியும் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பத்தில் 20,000 ரூபாவை பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள 180,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ள சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தலைமறைவான பொலிஸ் அதிகாரி மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய பிற தரப்பினரைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.