சினிமா
முத்துவிடம் மண்டாடி நிற்கும் சீதா! கண்ணீரில் தத்தளிக்கும் மீனா.. இனிநிகழ்வது என்ன..?

முத்துவிடம் மண்டாடி நிற்கும் சீதா! கண்ணீரில் தத்தளிக்கும் மீனா.. இனிநிகழ்வது என்ன..?
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதாவோட அம்மா அழுது கொண்டிருப்பதை பார்த்த அருணோட அம்மா ஏன் நல்ல நாள் அதுவுமா அழுகிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு சீதாவோட அம்மா என்ர பொண்ணு இப்படி ஏமாத்துவா என்று நான் நினைக்கவே இல்ல என்கிறார். பின் அருணோட அம்மா முதலில கல்யாணத்தை முடிச்சிரலாம் என்று சொல்லுறார். அதுக்கு சீதாவோட அம்மா எங்கட மாப்பிள்ளை இல்லாமல் அதுமட்டும் நடக்காது என்கிறார். இதனை அடுத்து மீனாவும் சீதாவும் முத்து குடிக்கிற இடத்திற்கு போய் நிற்கிறார்கள். பின் முத்து மீனாவைப் பார்த்த உடனே தன்ர friend-ஐப் பார்த்து எதுக்கு இவங்கள இங்க கூட்டிக் கொண்டு வந்தனீ என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து சீதா மாமா இண்டைக்கு என்ர வாழ்க்கையில முக்கியமான நாள் அது நீங்க இல்லாமல் நடக்க கூடாது என்று சொல்லுறார். அதுக்கு முத்து அதுதான் ஏற்கனவே நடத்திட்டீங்களே என்கிறார்.பின் சீதா முத்துவோட காலில விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இதனை அடுத்து அருண் சீதாவோட அம்மாவப் பார்த்து எதுக்காக இந்த சின்ன பிரச்சனையை இவ்வளவு பெருசாக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு என்ர பொண்ண யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணது சின்ன விஷயமா என்று கேட்கிறார் சீதா அம்மா. மேலும் மாப்பிள்ளை வந்தால் தான் கல்யாணம் நடக்கும் என்கிறார்.இதனை அடுத்து மீனா முத்துவை பார்த்து என்ன செய்யுறதா இருந்தாலும் பிறகு பண்ணுங்க இப்ப அவளோட கல்யாணத்திற்கு வாங்க என்கிறார். பின் மனோஜ் விஜயாவை பார்த்து இந்த கல்யாணம் நடக்குற மாதிரி தெரியல வாங்க இங்க இருந்து போகலாம் என்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை மனோஜை பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட்.