Connect with us

சினிமா

ரிலீஸுக்கு ரெடியான “Bad Girl”..! படக்குழுவின் புதிய தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Published

on

Loading

ரிலீஸுக்கு ரெடியான “Bad Girl”..! படக்குழுவின் புதிய தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான புகழ்பெற்ற திரைப்படமான “Bad Girl”, தற்போது விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 5, 2025 என்ற தேதியில், படம் இந்தியா முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.இந்த படம், கடந்த ஆண்டு பல சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளும், பாராட்டுகளும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.”Bad Girl” திரைப்படம், ஒரு பெண்ணின் தன்னிச்சையான வாழ்வு, சமுதாய எதிர்ப்புகள் மற்றும் பெண் சுதந்திரத்தின் அழுத்தமான வலி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கலைப்படைப்பு.இப்படத்தில், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன், டீஜே அருணாசலம், ஹிருது ஹாரூன் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது போல், முதலில் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும். அதன்பின், ஓரிரு வாரங்களுக்குள் OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன