இந்தியா
விபத்துக்குள்ளான இந்தியப் போர் விமானம் – இரு விமானிகள் மரணம்

விபத்துக்குள்ளான இந்தியப் போர் விமானம் – இரு விமானிகள் மரணம்
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் ஒன்று புதன்கிழமை (ஜூலை 9) ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
அம்மாவட்டத்தின் ரத்தன்கர் நகருக்கு அருகே இவ்விபத்து நேர்ந்தது. இதில் விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்து போனதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்தது.
வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக அது குறிப்பிட்டது. இவ்விபத்தில் பொதுமக்களின் உடைமைகள் எதுவும் சேதமடையவில்லை.
விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை இந்திய விமானப்படை அமைத்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நிலைமையை மதிப்பிடவும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடவும் காவல்துறைக் குழுக்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
“விபத்து நேர்ந்த இடத்திற்கு அருகே மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று கமலேஷ் என்ற காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை