Connect with us

சினிமா

43 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா! காதலன் செய்த Propose, ஏற்று கொண்ட அனுஷ்கா

Published

on

Loading

43 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா! காதலன் செய்த Propose, ஏற்று கொண்ட அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவின் ராணியாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி படத்தின் மூலம் சோலோ ஹீரோயினாக வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை தென்னிந்திய சினிமாவில் உருவாக்கினார்.ஆனால், பாகுபலி 2 எனும் மாபெரும் வெற்றிக்கு பின் அனுஷ்காவிடம் இருந்து வெற்றி படம் வெளிவரவில்லை. மேலும் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது காட்டி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது.அனுஷ்காவை பற்றி எப்போது செய்தி வெளிவந்தாலும், அவருடைய திருமணம் பற்றிய பேச்சும் எழுந்துவிடும். பாகுபலி படத்தின் சமயத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான் என கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.அவரது வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். ஆனாலும் கூட இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார். அதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.”நான் 6ம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என கூறினான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக சொன்னான். அந்த நேரத்தில் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், ‘சரி’ என அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அது, என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது” என கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன