Connect with us

பொழுதுபோக்கு

இயக்குனருடன் நெருக்கம்… அமெரிக்க பயணம்; மீண்டும் காதலில் விழுந்த சமந்தா?

Published

on

Samantha Ruth

Loading

இயக்குனருடன் நெருக்கம்… அமெரிக்க பயணம்; மீண்டும் காதலில் விழுந்த சமந்தா?

நடிகர் நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா, சில உடல்நல பிரச்னைக்கு ஆளாக நிலையில், அதில இருந்து மீண்டு வந்து தற்பேர் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய், சூர்ய, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தெலுங்கில் பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், 4 வருடங்களுக்கு பிறகு அவரை பிரிந்தார்.அதன்பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தா, சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய நிலையில், தற்போது திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடித்த தி ஃபேமிலி மேன் வெப் தொடர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே. என்ற இரட்டை இயக்குனர்களில் இயக்கத்தில் சமந்தா அடுத்து, கார்ட்டல் ஹனிபென்னி என்ற தொடரில் நடித்துள்ளார்.பிர்க்கிள் பால் விளையாட்டில் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கும் சமந்தா, தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதில், இரட்டை இயக்குனர்களாக இருக்கும் ராஜ் மற்றும் டி.கே ஆகிய இருவரில் ராஜ் நிதிமோரு இருவரும் காதலில் இருப்பதாகவும், டேட்டிங் செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களுக்கு இருவருமே இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.இதனிடையே, சிட்டாடல் வெப் தொடருக்கு பின் இவர்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இருவரும், ஒன்றாக பொது இடங்களில் இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் ராஜ் நிதிமோருவுடன் அமெரிக்கா சென்ற புகைப்படங்களை நடிகை சமந்தா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சமந்தா தனது காதலை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.அதே சமயம், ராஜ் – சமந்தா குறித்து ராஜ் மனைவி சியாமலி அவ்வப்போது வெளியிடும் பதிவுகளும் கவனம் ஈர்த்து வருகிறது. இதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பதிவில், “நம் செயல்கள் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது. அது தான் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதி” என்று கூறியுள்ளார். இதனால் சமந்தாவின் காதல் டேட்டிங் உண்மையா? அல்லது வதந்தியா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன