இலங்கை
இரகசிய தகவலால் கைதான சந்தேக நபர்!

இரகசிய தகவலால் கைதான சந்தேக நபர்!
இரத்தினபுரி மாவட்டம் எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உடகஹகம, எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
எஹெலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1065.5 லீட்டர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.