இலங்கை
இலங்கைக்கு 30வீத வரி; ட்ரம்ப் அறிவிப்பு!

இலங்கைக்கு 30வீத வரி; ட்ரம்ப் அறிவிப்பு!
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது .
இதுவரை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரிகளையே விதித்து வந்தது. இவ்வாறான நிலையிலேயே. தற்போது வரிவிதிப்பு 30 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.