இலங்கை
இவ்வருடத்தில் தென்மராட்சியில் 24 பேருக்கு டெங்கு!

இவ்வருடத்தில் தென்மராட்சியில் 24 பேருக்கு டெங்கு!
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் டெங்குக் காய்ச்சலால் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சாவகச்சேரி சுகாதாரப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் சங்கத்தானை, மண்டுவில், நுணாவில் மேற்கு ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகளிலிருந்து மூன்று டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே நுளம்பு பெருகும் இடங்களைத் துப்புரவு செய்து சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும் சுகாதாரப் பணியகத்தினர் மேலும் தெரிவித்தனர்.