இலங்கை
ஈஸ்டர் குண்டுவெடிப்புப் பற்றி பிள்ளையானுக்கு முன்பே தெரியும்; அமைச்சர் ஆனந்த விஜயபால அதிர்ச்சித் தகவல்!

ஈஸ்டர் குண்டுவெடிப்புப் பற்றி பிள்ளையானுக்கு முன்பே தெரியும்; அமைச்சர் ஆனந்த விஜயபால அதிர்ச்சித் தகவல்!
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் இடம்பெற்ற போதும் அவர் சிறையிலிருந்தார். ஆனால் மேற்படி தாக்குதல் குறித்து அவர் முன் கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் தொடர்பில் தற்போது தகவல்களை வெளியிடமுடியாது. அவை விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் அறிந்த அசாத் மௌலானாவை நாட்டுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகள் அனைத்தும் தற்போது நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கின்றன- என்றார்.