Connect with us

சினிமா

ஒரு நடிகைக்காக மல்லுக்கட்டிய நடிகர்கள்.. 3 மடங்கு சம்பளம் கொடுத்து வாங்கிய டாப் ஹீரோ

Published

on

Loading

ஒரு நடிகைக்காக மல்லுக்கட்டிய நடிகர்கள்.. 3 மடங்கு சம்பளம் கொடுத்து வாங்கிய டாப் ஹீரோ

பொதுவாக சினிமா துறையில் நடிகர் மற்றும் நடிகைகள் இடையே பல போட்டிகள் இருக்கும்.அந்த வகையில், 90 – ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களுக்குள் நடைபெற்ற தொழில் போட்டிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்த விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” 80-90களில் தொழில் போட்டிகளையும் தாண்டி, பல வகைகளில் நடிகர்களுக்குள் போட்டி இருந்தது. சில சமயம் தங்களது படங்களில் நடிகைகளை தேர்ந்தெடுப்பதில் கூட போட்டிகள் நடந்துள்ளது.அதன்படி, சிரஞ்சீவியும், ராதாவும் 13 படங்கள் ஜோடியாக நடித்தார்கள். அந்த 13 படங்களுமே பிளாக்-பஸ்டர் படங்கள் தான். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தொழில் போட்டியில் இருந்ததால், இது பாலையாவுக்கு அப்போது கடுப்பை தந்தது.ராதாவின் ஜோடிதான், சிரஞ்சீவிக்கு ஹிட் தருகிறது என்பதை அறிந்து ராதாவை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க முயன்றார்.ஆனால் அது நடைபெறவில்லை. அதனால், 3 மடங்கு சம்பளம் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி, ராதாவை தன்னுடைய படத்தில் புக் செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.     

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன